596 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்


596 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
x

விழுப்புரம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை 596 மாணவ-மாணவிகள் எழுதினர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே அவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி உள்பட 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும் தேர்வர்கள் மதியம் 1 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தொலைதூரங்களில் உள்ள மாணவ-மாணவிகள் மதியம் 12 மணிக்கே வந்து ,அந்ததேர்வு மையத்திற்கு சென்று வெளியில் காத்திருந்தனர். தங்கள் பெற்றோர்கள், உறவினர்களையும் அழைத்து வந்து காத்திருந்தனர்.

தீவிர சோதனை

தேர்வு மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பின்னர் மதியம் 1 மணிக்கு பிறகு மாணவர்களை மட்டும் வரிசையில் நிறுத்தி தீவிர சோதனை செய்த பிறகு தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது கைக்கடிகாரம், செல்போன், புளூடூத், ஹெட்போன், கேமரா, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மாணவிகள் கம்மல், வளையல் உள்ளிட்ட பொருட்களை பெற்றோர்களிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

பாதுகாப்பு

சிலர் முன்கூட்டியே வீட்டிலேயே கம்மல், வளையல் உள்ளிட்டவைகளை கழட்டி விட்டு வந்தனர். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். இந்த தேர்வை 596 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. தேர்வையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1 More update

Related Tags :
Next Story