ராஜீவ் வழக்கில் 6 பேர் விடுதலை; அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஓ.பன்னீர் செல்வம்
ராஜீவ் வழக்கில் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து சிறையில் இருந்த 6 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,
முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திரு.பேரறிவாளனை தொடர்ந்து, சுரேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
இதன்மூலம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அஇஅதிமுக இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.