கரூரில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்த புகாரில் 8 பேர் கைது


கரூரில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்த புகாரில் 8 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2023 8:59 AM IST (Updated: 28 May 2023 10:06 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அவரது நண்பர்கள் வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கரூரில் நேற்று முன் தினம்சோதனை நடத்த சென்ற போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. திமுகவினர் தாக்கியதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார்,பங்கஜ் குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் நேற்று திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளை தடுத்த புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story