6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து


6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:47 PM GMT)

ரெயில் பாதை பணிகள் காரணமாக 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம்

விழுப்புரம்

ஒடிசா மாநிலம் குர்தா சாலை கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் காரணமாக கரக்பூர், புரூலியா, ஹவுரா ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதாவது விழுப்புரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பகல் 12.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- கரக்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22604) ஆகஸ்ட் 15 (இன்று), 22-ந் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் கரக்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் கரக்பூர்- விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22603) ஆகஸ்ட் 17, 24-ந் தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- புரூலியா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22606) ஆகஸ்ட் 16, 19, 23, 26-ந் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் புரூலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் புரூலியா- விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 18, 21, 25, 28 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து புதன்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12868) ஆகஸ்ட் 16, 23-ந் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் ஹவுராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11.25 மணிக்கு புறப்படும் ஹவுரா- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 20, 27-ந் தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story