சாராயம் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ராஜா, ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு, தேவபாண்டலம், வடசிறுவள்ளூர், கிடங்கன்பாண்டலம், விரியூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்ததாக புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி(வயது 53), கிருஷ்ணமூர்த்தி(61), விரியூர் லூர்துசாமி(40), கிடங்கன்பாண்டலம் கோவிந்தராஜ்(41), வடசிறுவள்ளூர் அசோகன் மனைவி கொளஞ்சி(43), தேவபாண்டலம் சடையன்(62) ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்த 107 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story