பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் வாங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆத்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 28), தர்மலிங்கம் (49), செல்வம் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தொண்டமாங்கினம் மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடியதாக கவுண்டம்பட்டியை சேர்ந்த தங்கரெத்தினம் (23), ஹரிசந்திரன் (39), பழனிவேலு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story