மது விற்ற 6 பேர் கைது


மது விற்ற 6 பேர் கைது
x

மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோயம்பள்ளியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48), மண்மங்கலத்தை சேர்ந்த மலர்விழி (58), சோமுரை சேர்ந்த மகேந்திரன் (38), சின்னதாராபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி (43), ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த பூபதி (46), குளித்தலையை சேர்ந்த ராமசாமி (54) ஆகிய 6 பேர் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 48 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story