வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம்


வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 Jun 2023 7:32 PM GMT (Updated: 25 Jun 2023 7:34 AM GMT)

திருக்குறுங்குடி அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி வனசரகம் நம்பிகோவில் பீட் விளக்கெண்ணைய் கசம் பகுதி தடை செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும், இப்பகுதியில் நேற்று திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனவர் முத்தையா, வனக்காப்பாளர்கள் சார்லஸ்குமார், செல்வமணி மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் அத்துமீறி நுழைந்து, மது அருந்தி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூந்தங்குழியை சேர்ந்த அந்தோணி மிக்கேல் மகன் அன்னமரியான் (வயது 37), எட்வின் மகன்கள் கபில்தேவ் (28), ஜெய்ஸ் (20), செல்வம் மகன் அந்தோணி (30), ஆல்டிரின் மகன் டிகோ (23), சந்தியா மகன் ஆம்ஸ்ட்ராங் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story