சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம் - மெட்ரோ நிறுவனம்
கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த அக்டோபர் மாதத்தில் 61.56 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், "சென்னையில் மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
01.01.2022 முதல் 31.07.2022 வரை மொத்தம் 3,01,15,886 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.08.2022 முதல் 31.08.2022 வரை மொத்தம் 56,66,231 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.09.2022 முதல் 30.09.2022 வரை மொத்தம் 61,12,906 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.10.2022 முதல் 31.10.2022 வரை மொத்தம் 61,56,360 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 21.10.2022 அன்று 2,65,683 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 43,454 குறிப்பிடத்தக்கது. பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022, அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,57,688 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 36,33,056 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது" என்று அதில் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.