சென்னையில் வரும் 7-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


சென்னையில் வரும் 7-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2023 9:45 PM GMT (Updated: 3 Dec 2023 9:45 PM GMT)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை,

பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் 7-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிடி தியாகராயர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.இந்த கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்கிறார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பொருள்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story