மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x

மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தரகம்பட்டி பகுதியில் பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நல்லூர்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது 30), புங்கம்பாடி பகுதியை சேர்ந்த தங்கராஜ் (60), சுக்காம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி மாரியாயி (45) ஆகியோர் அந்தந்த பகுதிகளில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தோகைமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கவுண்டம்பட்டியை சேர்ந்த பழனியம்மாள் (33), சிறுகாம்பனையூர் பகுதியை சேர்ந்த சிவா (28),அதே ஊரை சேர்ந்த சதீஷ் (31), மணல்மேல்குடியை சேர்ந்த சிவகணேசன் (31) ஆகியோர் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story