புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைக்காரர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைக்காரர்களுக்கு அபராதம்
x

கடலூரில் பள்ளிக்கூடங்கள் அருகில் புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூர்


கடலூர் வண்டிப்பாளையம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் அபிநயா தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், சுகாதார ஆய்வாளர்கள் காரைக்காடு குமார், பெருமாள், முருகன், நடுவீரப்பட்டு குமார், குணசேகரன், பிரகலாதன் ஆகியோர் நேற்று வண்டிப்பாளையம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்திற்குள் இருந்த கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 7 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 7 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story