அதிக பாரம் ஏற்றிய 7 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றிய 7 லாரிகளுக்கு அபராதம்
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருநது லாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்கள், எம்.சாண்ட் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் கிணத்துக்கடவு, சொக்கனூர், வீரப்பகவுண்டனூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன தணிக்கை நடத்தினர். இதில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 7 லாரிகளுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story