75 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: 3 ஓட்டுகள் பெற்ற 2 சுயேச்சை வேட்பாளர்கள்


75 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: 3 ஓட்டுகள் பெற்ற 2 சுயேச்சை வேட்பாளர்கள்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் தலா 3 ஓட்டுகள் பெற்றனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளை பெற்று தனது டெபாசிட் தொகையை தக்க வைத்து கொண்டார். மீதமுள்ள 75 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.

சுயேச்சையாக போட்டியிட்ட 14 வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகளை பெற்றிருந்தனர். அதில் சுயேச்சை வேட்பாளர்களான ஆர்.குமார், எம்.பிரபாகரன் ஆகியோர் தலா 3 ஓட்டுகளை மட்டுமே வாங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story