சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா


சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
x

சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சியில் திருவன்புத்தேரியில் புதிதாக தூர்வாரப்பட்டு கரையமைக்கப்பட்ட பகுதியில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிசெய்யும் பணியாளர்களை கொண்டு 75 மரக்கன்றுகள் நடும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வைப்பூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆர்.பாரதிராஜா, 2-வது வார்டு உறுப்பினர் ஆர்.கோதண்டம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சந்தானம், ஊராட்சி செயலர் திலீப், மக்கள் நல பணியாளர் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story