76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

76-வது நினைவு தினத்தையொட்டி மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
சென்னை,
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story