78-வது சுதந்திர தினம்: தேசியக் கோடி ஏற்றிய கவர்னர் ஆர்.என் .ரவி


கவர்னர் மாளிகையில் ஆர்.என். ரவி தேசியக் கோடி ஏற்றினார்.

சென்னை,

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை)கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசியக் கோடி ஏற்றினார்.

தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தேசிய சுதந்திர போராட்ட வீரர்களைப் போல உடையணிந்த பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார்

1 More update

Next Story