கஞ்சா விற்ற 8 பேர் கைது
கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கராபுரம்,
சின்னசேலம் அருகே வி.கூட்டுரோடு பகுதியில் சின்னசேலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த பெரியேரி கிராமத்தை சேர்ந்த அன்புரோஸ் (வயது 25) மற்றும் 18 வயதுடைய சிறுவன் என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா விற்றதாக சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்த பரதன் (20), கார்த்திகேயன் (26), விஜய் (20) ஆகியோரை சங்கராபுரம் போலீசாரும், நாகலூர் அருகே வடபூண்டி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (23) என்பவரை கள்ளக்குறிச்சி போலீசாரும், வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (21) என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசாரும், ரங்கப்பனூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (22) என்பவரை வடபொன்பரப்பி போலீசாரும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரிடம் இருந்தும் சுமார் 2½ கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.