மது விற்ற 8 பேர் கைது
மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மண்மங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது53), கோவிந்தராஜ் (73), தும்பிவாடியை சேர்ந்த ரங்கநாதன் (68), அரவக்குறிச்சியை சேர்ந்த அன்பழகன் (55), நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி (60), சிவகங்கையை சேர்ந்த ராமலிங்கம் (50), சீனிவாச புரத்தைச் சேர்ந்த ராஜா (46), பசுபதிபாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் (37) ஆகிய 8 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story