சாராயம் விற்ற 8 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 8 பேர் கைது
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சேஷசமுத்திரம், தியாகராஜபுரம், சிவபுரம், நெடுமானூர், விரியூர் பகுதிகளில் தீவிர ரோந்துபணி மேற்கொண்டனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்ததாக சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்(வயது 42), சுப்பிரமணி்(43), தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன்(45), கோபால் (48), நெடுமானூர் கிராமம் சாமிக்கண்ணு(37), திருமுருகன்(32), சிவபுரம் கிராமம் பச்சையப்பன்(36), விரியூர் கிராமம் டேவிட்ஆனந்தராஜ்(41) ஆகிய 8 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 287 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story