அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகள் திருட்டு


அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகள் திருட்டு
x

துறையூர் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

துறையூர் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் 8 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

துறையூரை அடுத்த செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 43). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு விவசாய வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. மறைவான இடத்தில் வைத்து இருந்த சாவியை எடுத்து யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர்.

காய்கறி வியாபாரி

இதேபோன்று பக்கத்து வீட்டை சேர்ந்தவர் காமாட்சி (60). காய்கறி வியாபாரியான இவர் வீட்டை பூட்டிவிட்டு காய்கறி விற்பனைக்காக சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்த போது, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தபோது, வீட்டில் டிரங்க் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து ரங்கராஜ், காமாட்சி ஆகியோர் தனித்தனியாக துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். 2 வீடுகளிலும் ஒரே கும்பல்தான் திருட்டில் ஈடுபட்டு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story