சென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துதுறை அறிவிப்பு


சென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துதுறை அறிவிப்பு
x

சென்னை திரும்ப 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் வேலைபார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த பேருந்துகள் மூலம் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு மொத்தம் 8,003 அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருவர். இதற்கு ஏதுவாக சுமார் 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் வரும் புதன்கிழமை (அக்.25) வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

1 More update

Next Story