ரூ.85 லட்சத்தில் சாலைகளை சுத்தம் செய்யும் வாகனம்
கள்ளக்குறிச்சியில் ரூ.85 லட்சத்தில் சாலைகளை சுத்தம் செய்யும் வாகனம் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக நகர மன்ற தலைவரும் தி.மு.க. நகர செயலாளருமான சுப்ராயலு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.28 லட்சத்து 37 ஆயிரமும், அரசு பங்களிப்பாக ரூ.56 லட்சத்து 74 ஆயிரம் என மொத்தம் ரூ.85 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் சாலைகளில் உள்ள மண்ணை சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சாலைகளில் மண்ணை சுத்தம்செய்யும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உள்ள மண் சுத்தம் செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன், நகர மன்ற துணைத்தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.