கண்மாய்க்குள் பதுக்கிய 880 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கண்மாய்க்குள் பதுக்கிய 880 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே கண்மாய் முள்செடி புதருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 880 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே கண்மாய் முள்செடி புதருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 880 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ேராந்து பணி

ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் முத்துக்கிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன் உள்ளிட்ட போலீசார் சாயல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாயல்குடி அருகே கொக்காடி கண்மாய் பகுதியில் முள்செடி புதருக்குள் ரேஷன் அரிசி மூடைகள் குவித்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

இதை தொடர்ந்து அங்கு சென்று ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றிய போலீசார் 22 மூடைகளில் தலா 40 கிலோ எடையுள்ள 880 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துவிட்டு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story