கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட் லாரி நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை தெற்கு அலகு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார், கோயம்பேடு மார்க்கெட் லாரி நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நிறுத்தி இருந்த லாரியை சோதனை செய்தனர்.

அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 175 மூட்டைகளில் மொத்தம் 8,750 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியது தெரியவந்தது. லாரியில் இருந்து மொத்தம் 8¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் பீகாபலசாலி என்பவர் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story