3 மாதங்களில் 900 சிம் கார்டுகள்..! ஒரே நாளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை- சிக்கியது மோசடி கும்பல்


3 மாதங்களில் 900 சிம் கார்டுகள்..! ஒரே நாளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை- சிக்கியது மோசடி கும்பல்
x

லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வொர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் உத்தரப்பிரதேசம், அரியானா, பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட அண்ணன் தங்கை உட்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "லோன் ஆப் மூலம் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை வசூலிக்க தனியார் ஏஜென்சி செயல்படுகின்றனர். பணம் வாங்கிய நபர்கள் போட்டோவை மார்பிங்க் செய்து மோசடியில் செயல்படுவது தெரியவந்தது.

பின்னர் அந்த நபர்கள் 937 செல்பொன் எண்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் 200 UPI Id-ஐ பயன்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு கீழ் 50 பேர் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணபரிவர்த்தனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நான்கு பேர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின் பெரிய மோசடி கும்பல் உள்ளது. பீகாரில் அந்த கும்பல் பதுங்கியுள்ளது. அவர்களை கைது செய்ய உள்ளோம். இந்தியா முழுவதும் 45 ஆயிரன் பேர் லோன் ஆப் மூலம் பாதிக்கபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். லோன் ஆப் மோசடி தொடர்பாக இதுவரை 6 புகார்கள் பெறப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.


Next Story