தண்டவாளத்தில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் சாவு


தண்டவாளத்தில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவர் சாவு
x

தண்டவாளத்தில் தவறி விழுந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் திருக்காளிமேடு பகுதியில் வசிப்பவர் காளிதாஸ். இவரது மனைவி அன்னபூரணி. காளிதாஸ் காஞ்சீபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ரித்திஷ் (14), யுவனேஷ், விக்னேஷ் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகனான ரித்திஷ் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 4 பேருடன் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

பின்னர் வீட்டுக்கு செல்வதற்கு தண்டவாளத்தை கடந்து செல்லும் போது தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ரித்திஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story