வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை முகமூடி கொள்ளையடித்து பறித்து சென்றனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் மருதை. இவரது மனைவி அலமேலு(வயது 60). இவர்கள் 2 பேரும் தங்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அலமேலுவின் கழுத்தில் கிடந்த சுமார் 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அலமேலு அரும்பாவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story