கோவையில் விற்கப்பட்ட சிம்கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலம்


கோவையில் விற்கப்பட்ட சிம்கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலம்
x

கோவையில் விற்கப்பட்ட சிம்கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலமாகியுள்ளது.

திருச்சி

வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் வாட்ஸ்-அப் மூலம் மர்ம ஆசாமி அனுப்பிய குறுஞ்செய்தியில், நான் மனித வெடிகுண்டு. இன்றைக்கு திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போகிறேன். முடிந்தால் காப்பாற்று என்று அனுப்பப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நுண்ணறிவு பிரிவு போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கமிஷனர் உத்தரவின்பேரில், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் ஜங்ஷன் ரெயில் நிலையம் முழுவதும் 3 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து செல்போனில் வந்த குறுஞ்செய்தி வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்?, எதற்காக மிரட்டல் விடுத்தார்? என தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

கோவையில் விற்கப்பட்ட சிம்கார்டு

அப்போது அந்த சிம்கார்டு புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையை சேர்ந்த பஸ் கண்டக்டரான தேவராஜ் முகவரியில் வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது முகவரியை போலியாக பயன்படுத்தி சிம்கார்டு வாங்கி இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த சிம்கார்டு கோவையில் உள்ள ஒரு செல்போன் கடையில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மஆசாமியை தேடி வருகிறார்கள்.


Next Story