ஆவடி அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட தரகர் கைது


ஆவடி அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட தரகர் கைது
x

ஆவடி அருகே விபசார தொழிலில் ஈடுபட்ட தரகரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடி அருகே வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் அடங்கிய தனிப்படை போலீசார் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவல் படி, கோவில்பதாகை சுதர்சனம் நகரில் ஒரு வீட்டை விபசார தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். அத்துடன் பெண்ணை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சென்னை வேளச்சேரி ஓரணியம்மன் தெருவை சேர்ந்த கவியரசன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கவியரசனை புழல் சிறையில் அடைத்தனர். விபச்சாரத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணை சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story