போலீஸ் பொய் வழக்கு போடுவதாக சென்னை ஐகோர்ட்டு வாசலில் தற்கொலைக்கு முயன்ற அண்ணன்-தம்பி


போலீஸ் பொய் வழக்கு போடுவதாக சென்னை ஐகோர்ட்டு வாசலில் தற்கொலைக்கு முயன்ற அண்ணன்-தம்பி
x

போலீஸ் பொய் வழக்கு போடுவதாக சென்னை ஐகோர்ட்டு வாசலில் அண்ணன், தம்பி இருவரும் பிளேடால் உடல் முழுவதும் கீறிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆனஸ்ட் ராஜ் மற்றும் ஜோதிபாசு. அண்ணன்-தம்பியான இவர்கள் இருவர் மீதும் சென்னை கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் போலீசார் கைது செய்யப்போனால் இருவரும் பிளேடால் உடலில் கீறிக்கொண்டு போலீசை கைது செய்ய விடாமல் தப்பித்து வந்தனர்.அண்ணன்-தம்பி மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டு 6-வது நுழைவு வாயில் அருகே ஆனஸ்ட்ராஜ், ஜோதிபாசு இருவரும், "போலீசார் எங்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக" கூறி போலீசை கண்டித்து திடீெரன இருவரும் பிளேடால் தங்கள் உடல் முழுவதும் சரமாரியாக கீறி தற்கொலைக்கு முயன்றனர்.

உடனடியாக ஐகோர்ட்டு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அண்ணன்-தம்பி இருவரையும் மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு சிகிச்சைக்கு பிறகு அண்ணன்-தம்பி இருவரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story