மரத்தில் கார் மோதியது; 3 பேர் படுகாயம்


மரத்தில் கார் மோதியது; 3 பேர் படுகாயம்
x

மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

திருப்பூர் அருகே உள்ள மன்னாரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களது குழந்தைகள், உறவினர்கள் 9 பேருடன் தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் சென்றனர்.காரை மணிகண்டன் ஓட்டினார். இவர்கள் வந்த கார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் சேத்தூர் பாரதி நகரை கடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணிகண்டன் உள்பட 2 பேர் உயிர் தப்பினர். திவ்யபாரதி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களை தளவாய்புரம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story