சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு


சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
x

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

யூடியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். அவருடன் அவரது உதவியாளர், கார் ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி நகர காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story