திருவொற்றியூர் அருகே மாநகர பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது; 2 பேர் காயம்


திருவொற்றியூர் அருகே மாநகர பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது; 2 பேர் காயம்
x

திருவொற்றியூர் அருகே மாநகர பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது.

சென்னை

சென்னை பாரிமுனையில் இருந்து மணலி வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 44) நேற்று திருவொற்றியூர் அருகே சாத்தாங்காடு பக்கிங்காம் கால்வாய் ெரயில்வே தண்டவாளம் பகுதியில் மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மாநகர பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியதுடன், பின்பகுதியும் லேசாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ரவி (வயது 50) மற்றும் பஸ்சில் பயணம் செய்த தேன்மொழி என்ற பெண் பயணி ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story