கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்த நாய் ஒன்று, மேலே வர முடியாமல் தவித்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மேலிருந்து கயிற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக் கூடை மூலமாக நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு, வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் போராடியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி கயிறு மூலம் மாட்டை உயிருடன் மீட்டு, மேலே கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். நாய் மற்றும் பசுமாட்டினை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Next Story