சென்னையில் மாநகர பஸ் மீது கிரேன் மோதியதால் பரபரப்பு...!


சென்னையில் மாநகர பஸ் மீது கிரேன் மோதியதால் பரபரப்பு...!
x

சென்னையில் மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மோதி மாநகர பஸ் சேதமடைந்தது.

சென்னை,

சென்னை வடபழனியில் இன்று காலை சென்று கொண்டிருந்த மாநகர பஸ் மீது மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மோதியது. இந்த விபத்தில் பஸ் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மோதியதில் சேதமடைந்த மாநகர பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story