அரசு பள்ளியில் சேதமடைந்த ஆய்வகம்


அரசு பள்ளியில் சேதமடைந்த ஆய்வகம்
x

நரிக்குடி அருகே அரசு பள்ளியில் சேதமடைந்த ஆய்வகத்தால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

விருதுநகர்

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 650 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வீரசோழன், பாப்பாங்குளம், ஒட்டங்குளம், நல்லுக்குறிச்சி, சுள்ளங்குடி, மேல பருத்தியூர், வரிசையூர், உசிலங்குளம், சம்பக்குளம், தடுத்தலாங்கோட்டை, வீர ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் கட்டிட வசதிகள் மிக குறைவாக உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஆய்வகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் ஆய்வகத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.


இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இன்னும் சில மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயத்தமாக வேண்டிய நிலை இருந்து வருவதால் இந்த பள்ளியில் உள்ள சேதமடைந்த ஆய்வகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக ஆய்வகம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story