திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி மருந்து கடை ஊழியர் பலி


திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி மருந்து கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 4 Sep 2023 2:15 PM GMT (Updated: 4 Sep 2023 2:15 PM GMT)

சோளிங்கரில் கடை உரிமையாளர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த திருத்தணியை சேர்ந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

திருவள்ளூர்

கிரகப்பிரவேசம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பெரியகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவர்தனன் (வயது 29). இவர் திருத்தணியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மருந்து கடையின் உரிமையாளரின் வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்தது. இந்த கிரகபிரவேசத்திற்கு சென்ற கோவர்தனன் அந்த வீட்டை சுற்றி பார்த்த போது அங்கு அலங்காரத்திற்காக போடப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் தொங்கிக் கொண்டிருந்த ஒயர் கோவர்தனன் மீது பட்டது.

மின்சாரம் பாய்ந்து பலி

இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த காட்சியை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு உடனடியாக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story