பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
x

வாணியம்பாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிகுட்பட்ட கடைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தபடுகிறதா என்று நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் முகமது அலி பஜார், சி.எல். சாலை, ஜின்னா சாலை உள்ளிட்ட இடங்களில் திடீரென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முகமது அலி பஜார் பகுதியில் உள்ள இனிப்பகம் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 6 கடைகளுக்கு தலா ரூ.5000 என ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.


Next Story