தென்காசியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து


தென்காசியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து
x

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே மைப்பாறையில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கட்டடங்கள் சேதமடைந்தன.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி, பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story