வகுப்பறையில் செயல்பட்டு வரும் சமையல் அறை - பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு


x

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே சமையல் செய்யப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சேலம்,

அரசு பள்ளியில் வகுப்பறையிலேயே சமையல் செய்யப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கோவிந்த கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்த சமையலறைக் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் அகற்றப்பட்டது.

இதனையடுத்து பள்ளி வகுப்பறையிலேயே, மாணவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டு வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் வெடித்தாலோ அல்லது தீ பற்றினாலோ குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என அச்சமடைந்துள்ள பள்ளி குழந்தைகளின் பெற்றோர், வரும் ஞாயிற்று கிழமைக்குள் சமையலறை அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், திங்கள் முதல் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்துள்ளனர்.


Next Story