திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது


திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது
x

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஜெனரேட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது.

திருவள்ளூர்

திருத்தணி மா.பொ.சி சாலையில் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று திருத்தணி பகுதியில் மின் நிறுத்தம் என்பதால் நகராட்சி அலுவலகத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது மின்கசிவு காரணமாக ஜெனரேட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் காற்றில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்த நகராட்சி ஊழியர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நகராட்சி ஊழியர்கள் சாமர்த்தியமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து காரணமாக நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

1 More update

Next Story