வாலிபரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

மது குடிக்க பணம் கேட்டு வாலிபரிடம் தங்கச்சங்கிலி பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை முள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே செயற்கைகோள் நகரம் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மது குடிப்பதற்காக அருண்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அருண்குமார் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் முள்ளூர் பகுதியை சோந்த மனோஜ்குமார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






