வீட்டின் மீது அரசு பஸ் மோதியது


வீட்டின் மீது அரசு பஸ் மோதியது
x

வீட்டின் மீது அரசு பஸ் மோதியது

தஞ்சாவூர்

திருப்பனந்தாள

கும்பகோணத்தில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் சென்ற ஒரு அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு பஸ் நிலைதடுமாறி திருப்பனந்தாள் ஊருடையப்பர் கோவில் எதிரே உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியது. இதில் பஸ்சும், வீட்டின் சுவரும் சேதமடைந்தன. இதில் பஸ் டிரைவர் வீரமுரசு என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story