திண்டிவனத்தில்பாதாள சாக்கடை பள்ளத்துக்குள் சிக்கிய அரசு பஸ் :போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பள்ளத்துக்குள் சிக்கிய அரசு பஸ் சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்
திண்டிவனம்,
திருப்பதியில் இருந்து திண்டிவனம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை திருத்தணி பகுதியைச் சேர்ந்த பரதன் என்பவர் ஓட்டி வந்தார். ஞானவேல் என்பவர் கண்டக்டராக இருந்தார்.
திண்டிவனத்தில் உள்ள புது மசூதி வீதி அருகே பஸ் வந்த போது, அங்கு பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்துக்குள் பஸ்சின் முன்பகுதி சக்கரம் சிக்கியது. தொடர்ந்து பஸ்சை அங்கிருந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக வந்த வாகனங்கள், நேருவீதி வழியாக திருப்பி விடப்பட்டது. மேலும், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் திண்டிவனம் போலீசார் பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story