திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலி


திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலி
x

திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலியானார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சுலோச்சனா (வயது 56). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். சுலோச்சனாவுடன் 8-ம் வகுப்பு படிக்கும் அவரது பேரன் சபரிவாசன் (13) கூட சென்றார்.

சுலோச்சனா தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக திடீரென மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து பேரன் சபரிவாசன் மீது விழுந்தது.

பேரன் மின்சாரம் தாக்கி துடி துடித்ததைப் பார்த்த சுலோச்சனா பேரனை காப்பாற்ற முயன்றபோது மின்கம்பி சுரோச்சனா காலில் சுற்றி கொண்டது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சாரம் தாக்கி காயமடைந்த சபரிவாசனை அக்கம்பக்கத்தனர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story