மதுரை விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு


மதுரை விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
x

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்தது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணி முடித்த ஆய்வாளர் துருவ்குமார் ராய், தனது துப்பாக்கியை ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக தானாக வெடித்தது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாணடன்ட் உமா மகேஸ்வரன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். மேலும், துப்பாக்கி வெடித்தது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது.

1 More update

Next Story