மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி


மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
x

சென்னை பெரம்பூரில் மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்.

சென்னை

சென்னை ஜி.கே.எம். காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மோகனமணி. இவர்களுக்கு சுவேதா(4) என்ற மகள் இருக்கிறாள். நேற்று கார்த்திகேயன், பெரம்பூர் வடிவேலு மெயின் ரோட்டில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தார். பின்னர் தொட்டியை கழுவிய அழுக்கு நீரை வெளியேற்ற மோட்டார் 'சுவிட்ச்சை ஆன்' செய்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story