சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது


சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:45 PM GMT)

கண்டாச்சிபுரம் அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

விழுப்புரத்தை அடுத்த காணை கிராமத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து லாரி ஒன்று சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு முகையூர், கண்டாச்சிபுரம் வழியாக செங்கம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. காணை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயசந்திரன்(44) லாரியை ஒட்டினார். அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (42) கிளினராக இருந்தார்.

நேற்று முன்தினம் காலை கண்டாச்சிபுரம்- முகையூர் பிரதான சாலையில் பம்பகரை அரசு மதுபானக் கடை அருகே வந்த போது எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஜெயச்சந்திரன் லாரியை சாலையோரமாக ஒதுங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகள் அனைத்தும் கீழே பரவி கிடந்தது. மேலும் டிரைவர் ஜெயச்சந்திரனுக்கு காலில் எலும்பு முறிவும், கிருஷ்ணராஜிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் அப்பகுதியை சோந்த மக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story