திருவெண்ணெய்நல்லூர் அருகே உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணைநல்லூர் அருகே சி. மெய்யூர் கிராமத்தில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும், அவர்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். உடன் போலீசார் அவர்களை விரட்டியதில், ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றோருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சி.மெய்யூர் காலனியை சேர்ந்த நடேசன் மகன் பூங்கான் என்பதும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.